எரியும் தணலாய்

நெருடலில்
மூடிய நெஞ்சம்
நெருப்பால்
வாடியதாய் கெஞ்சுகிறது..
வருடிய சொற்கள்
அகம்பற்றி எரிக்க
குளிர்விக்கும் அன்பை
பெற்றிடவே ஏங்குகிறது...
நான் உன்னை நெருங்கிய போதும்
நீ என்னை விலகிய போதும்...
உறைபனி கொண்ட
என் உணர்வுகள்
உருகியே கரைகிறது...
இருந்தும் உன் உணர்வுகள் மதித்திடவே
என்னுயிரும் வாழ்கிறது...!
..கவிபாரதி..

எழுதியவர் : கவிபாரதி (12-Feb-15, 1:24 pm)
சேர்த்தது : கவிபாரதி
பார்வை : 44

மேலே