என்னுள் உறைந்தவள் அவள்

என்னில் ரசனைகள் ஊற்றிய
வானவில்லே...!
உந்தன் கண்களின் ருசியிலே
தோற்றவன் ஆனேன்...!
சின்ன சாரலாய் தூற்றிய
சிரிப்பாலே..!
மெல்ல காதலாய் மாறிய
உயிர்பூவே...!
அழகிய தருணமாய் கண்டதால்
உன்னையே...!
ஆழ்மனம் பூட்டிய அன்பினில்
நுழைந்தாய்...!
என்னில் உயிர்த்திடும்
நினைவே...!
உன்னில் உறைந்திட
வாழ்வேன்...!!
...கவிபாரதி...

எழுதியவர் : கவிபாரதி (12-Feb-15, 1:20 pm)
சேர்த்தது : கவிபாரதி
பார்வை : 65

மேலே