மழை …
கருநீல மேகத்திற்கு
குளிர்க்காற்றுடன்
மலை என்னும் வைத்தியரின்
பிரசவத்தில் பிறந்த
அழகு குழந்தை இவள் தானோ…
வெண்ணிறாடை உடுத்தி
பூமி என்னும் மைதானத்தில்
விளையாடவந்தவளின் வருகையை
பூக்களெல்லாம் புன்சிரிப்புடன்
வானவிலோடு வரவேற்கிறதே
யார் இவள்; இவளை யார் அறிவாரோ…
இவள் தான் நம் செல்லக்குழந்தையோ
அவளின் வருகைக்காகத் தான் தினமும்
காத்திருக்கும் எம் மக்களே
ஆம் அவள் தான் “ மழை “ …!