வெள்ளிக் கொலுசுக் கவிதை -ரகு

உதிர்வுநிலைக்குத் திரும்பிய
மரமொன்றும்
நிசப்தமாகவே நீளும்
தார் சாலையும்
கிளைச் சாலையாய்ப்
பிரிந்த ஒரு
ஒற்றையடிப் பாதையும்
பூக்கள்
இதழ் ஒற்றி
அனுப்பியத் தென்றலும்
தடித்த தனிமையும்
தயக்கங்காட்டிப் புறமுதுகிட

அருகருகிலான
வேலியைக் கடந்து
ஆங்கோர்க் குட்டி
அணிலுக்கு
கோவைப் பழம் ஈன்றக்
கொடியொன்றேக்
கொடுத்துதவியது

வெள்ளைத் தாளுக்கொரு
வெள்ளிக் கொலுசுக்
கவிதையை !

எழுதியவர் : அ.ரகு (12-Feb-15, 5:56 pm)
பார்வை : 65

மேலே