குறை ஒன்றும் இல்லை
தேடி தேடி
கிடைக்காத வார்த்தை
கிடைத்தது
அமுதம் வேண்டுமா?
ஆழ்கடல் சுழல்
உனக்கு சம்மதமா ?
நெருப்பில் என்னை
எரித்து
என்னை பெற்றாய்
நெருப்பில்
என்னை
எரித்தா என்னை
விற்பாய்
காலம் கேட்கும்
கேள்விக்கு நானே
பதிலாய்
காலவன் கேள்விக்கு
நான் யார்?
தமிழை நானே
கரைத்து
குடித்தேன்
தமிழை நானே
கவிதைக்கும்
விற்றேன்
இடம் பொருள்
எதுவென்று
தேடி பார்ப்பாயோ ?
இதமே இல்லாமல்
தேடி
அலைவாயோ ?
வினவி செல்லும்
பாதை
வினயன் தனயன்
ஒரு வழி பாதை
கவிதை தரும் சுகம்
காதல்
மயக்கம் !!!