ஒரு தலை காதலியின் வருகை

உன் வருகைக்காக தினம் தினம் காத்திருக்கிறேன்...!
செல்லும் பேருந்தெல்லாம் இதில் நீ வருவாயா என்று என் விழிகள் அலைகிறது...!
அந்நொடி பொழுதிலிருந்து என் உணர்வுகள் என்னிடமில்லை...!
நான் நின்றிருக்க......
சிறு நொடியில்,பேருந்திலிருந்து நீ இறங்கியதும் உன் விழிகள் என்னை மேய ஆரம்பிக்கிறது...!
நீ புன்னகையுடன் தலை கமர்ந்து நடந்து வரும் பொழுது என் அருகில் வந்ததும்,என்னை பார்த்து விட்டு பார்க்காதவாறு செல்கிறாயடி...!
உன் விழிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பதில்களை தருகிறாய்...!
தினமும் உன் காலடி படும் இடத்தில் தான் நடக்கிறேன்...!
உன் விழிகளை எனக்கு தந்துவிட்டாயடி...!
பெண்ணே...!
எதற்காக இந்த ஒளிவுமறைவு...!
இரு விழிகளும் இட மாறிவிட்டன...!
எப்போது இரு மனங்களும் இடமாறும்...!
சொல்லடி பெண்ணே...!

எழுதியவர் : அஜிக்கேயன் (13-Feb-15, 11:55 am)
சேர்த்தது : அஜிக்கேயன் பழநி
பார்வை : 98

மேலே