சொல்லாத காதல்

உள்நுழையும் சுவாசக்காற்று
......ஒவ்வொன்றும் சொல்லும்
என் உணர்வுக்குள் கலந்திருப்பது
......என்னவள் தான் என்று

பிரபஞ்சம் நிலைகுலைக்கும்
.......பிரளயங்கள் சொல்லும்
பித்தனிவன் நினைவதனை
...... பிரிக்க முடியாதென்று

மெத்தையிலே நான் நனைத்த
......தலையணைகள் சொல்லும்
மொத்தமாய் உன் நினைவை
......தத்தெடுத்தவன் நானென்று

உன் என்னத்தை எனக்களித்த
.....என் கண்கள் சொல்லும்
கன்னத்தை ஊடறுக்கும்
.....கண்ணீர்த்துளி வேண்டாமென்று

கண்ணாடி உள் தோன்றும்
......என் விம்பம் சொல்லும்
உன் தாடி நரைத்து
......ஓராண்டு ஆனதென்று

ஆண்டுகள் பல கடந்து
......என் ஆள் மனது சொல்லும்
சொல்லாத உன் காதல்
......என்றும் வெல்லாது என்று

மொத்தமாய் கட்டித்தரும்
......என் பரிசு சொல்லும்
கட்டிய உன் கணவன்
......உனக்கு கனப்பொருத்தமென்று...!!!!!!


எனவே நண்பர்களே உண்மையான அன்பு நிறைந்த காதல் உங்களுக்குள் இருந்தால் இன்று முழுதும் திட்டமிட்டு நாளை சொல்லிவிடுங்கள்
"அனைவருக்கும் இனிய காதலர் தின நல்வாழ்த்துக்கள்......."

எழுதியவர் : ஜெகன் (13-Feb-15, 4:39 pm)
சேர்த்தது : ப ஜெகன்
Tanglish : sollatha kaadhal
பார்வை : 169

மேலே