தாய்மையை வென்ற தாய்மை

தாயின் பாசத்திற்கும்
பாட்டியின் பாசத்திற்கும்
இடையில் சிக்கி
தவித்தது
ஓர் குழந்தை

தாய்
தன் குழந்தையின்
பாசத்திற்கு ஏங்கிய போது
பாட்டி
தன் உலகமே
அந்த குழந்தை
என்றிந்தாள்...

தன் குழந்தை
நலமாக இருந்தால் போதும்
தன் குடும்பம்
நிம்மதியாக இருந்தால் போதும்
என்று
விட்டுக்கொடுத்தாள்
தாய்மை உணர்வை...
கட்டுபடுத்திக் கொண்டாள்
ஏக்கத்தை..
தாய்..

குழந்தையின்
அருகில் இருந்து உணராமல்
தூரம் நின்று ரசித்து சிரித்தாள்
தன்னையே ஏம்மாற்றி கொள்வதை
அறியாத
அந்த தாய்...

எழுதியவர் : சரண்யா பொன்குமார் (13-Feb-15, 4:50 pm)
சேர்த்தது : saranyaponkumar
பார்வை : 63

மேலே