saranyaponkumar - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  saranyaponkumar
இடம்:  Bangalore
பிறந்த தேதி :  30-Oct-1988
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  26-Nov-2013
பார்த்தவர்கள்:  88
புள்ளி:  22

என்னைப் பற்றி...

என் வலைத்தளம் https://saranyapkbeyondthelimits.wordpress.com/

என் படைப்புகள்
saranyaponkumar செய்திகள்
saranyaponkumar - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Aug-2018 2:58 pm

பள்ளி படிப்பை சுமையாய் கண்டேன்..
கடின உழைப்பால் வெற்றி கொண்டேன்!

குடும்பத்தை பிரிந்து
அழுதேன்
கல்லூரி விடுதியில்..
காலம்
பிரிவை
பக்குவப்படுத்தியது!

பல முறை தோற்றேன்
வேலைக்கான
தேர்வில்...
விடா முயற்சியால்
வேலை கிடைத்தது!

காதல் கொண்டு தவித்து
காதலித்தவன் நிராகரித்து
வாழ்க்கையை தேடி அழைத்தேன்...
என் எண்ணத்தை மாற்றினேன்
துயரம் எண்ணத்தில் மட்டுமே
என உணர்ந்து..
மீண்டு எழுந்தேன்
வாழ்க்கை என் கையில் என!

சுதந்திரம்
திருமணத்தால்
பறி போகும் என்ற பயம்..
பயத்தை போக்கியது
திருமணமே!

ஒவ்வொரு நிலையையும்
கடந்தது..
இப்போதும்
ஆச்சரியமே!

இந்த
பாதையும்
பயணமும்
நடத்திய

மேலும்

அழகை சொன்னிர்கள் தோழி..... அருமை.... வாழ்த்துக்கள்... 07-Aug-2018 4:09 pm
saranyaponkumar - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Nov-2017 2:44 pm

வரமா சாபமா
தெரியலடி
நீ என்
வாழ்க்கையில
வந்தது.

என்ன நல்ல
பாத்துக்குறேன்னு
என் வேலையெல்லாம்
நீ செய்ய,
ஒன்னும் தெரியாதவ
ஆனேனடி.

எல்லா வேலையும்
நீ செஞ்சும்
உன்ன பாராட்ட
முடியல..
சொல்லி காமிச்சடி.

என் வேலைய
நா செஞ்சாலும்
உனக்கு புடிச்சமாதிரி
செய்ய சொல்லி
கெடுத்தாயடி.

அக்கறைங்கிற
பேருல
என் சுதந்திரத்தை
பறிச்சாயடி.

நீ செய்யறது
தப்புனாலும்
கோச்சிக்குவ.
உன்ன ஒன்னு
சொல்லலனாலும்
கோச்சிக்குவ.

நீ
நல்லவளா
கட்டவளா
தெரியலடி…
என்ன பாத்துக்குறேனு
உன்ன வருத்திக்காதடி!

மேலும்

நன்று 22-Nov-2017 12:27 pm
saranyaponkumar - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Nov-2017 2:43 pm

தாயின் பாசத்திற்கும்
பாட்டியின் பாசத்திற்கும்
இடையில் சிக்கி
தவித்தது
ஓர் குழந்தை!

தாய்
தன் குழந்தையின்
பாசத்திற்கு ஏங்கிய போது…
பாட்டி
தன் உலகமே
அந்த குழந்தை
என்றிந்தாள்…

தன் குழந்தையின் நலம்..
தன் குடும்பத்தின் நிம்மதி…
கருதி
விட்டுக்கொடுத்தாள்
தாய்மை உணர்வை…
கட்டுபடுத்திக் கொண்டாள்
ஏக்கத்தை..
அந்த தாய்..

குழந்தையை
மார்போடு அனைத்துக் கொள்ளாமல்
தூரம் நின்று ரசித்து சிரித்தாள்..
கற்பனையில் வாழ்ந்தாள்..
தன்னையே ஏம்மாற்றி கொள்வதை
அறியாத
அந்த தாய்…

மேலும்

saranyaponkumar - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Jan-2017 4:37 pm

அழகிய குடும்பத்தில்
மூத்த பிள்ளையாய்
முந்தி பிறந்தேன்….

வீடு பள்ளி
தவிர வேறு இடம்
தெரியாமல் வளர்ந்தேன்…

குழந்தை மனம்
ஆசை பட்டாலும்
பெற்றோருக்கு
சுமை கொடுக்க
மகள் மனம்
தடுக்க..
தடுமாறி..
பின்
நிலை கொண்டேன்…

ஒரு நல்ல தோழி
தங்கை என்று
உணராமல்
சண்டையிட்டு
பொறாமை கொண்டேன்…

அன்புத் தம்பியை
அரவணைத்த
தோழி ஆனேன்…

படிப்பை தவிர
வேறு கலைகள்
அறியேன்..

பள்ளி
படிப்பு
பட்டப்படிப்பு
பண்பு என
உயிர் தோழியை
பின் தொடர்ந்தேன்..

சோம்பேறியென
பட்டமளிக்க பட்டு
எதனாலென்று
புரியாமல் வியந்தேன்…

காதலில் சிக்க கூடாதென்றாலும்
மனம் தடுமாறிய சில நொடிகளை
வென்று வந்தேன்….

மேலும்

saranyaponkumar - saranyaponkumar அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Dec-2013 12:59 pm

தயக்கமின்றி
கட்டளையின்றி
பணியிடம் செல்லும்
என் கால்களுக்கு
எப்படி சொல்லுவேன்
இனி வேறு இடமென்று!!!

மேலும்

பணியிடத்தை குறிப்பிட்டுள்ளேன். 11-Dec-2013 3:11 pm
புகுந்த வீட்டிற்கு செல்ல போவதை கூறுகிறாயா தோழியே? 11-Dec-2013 2:43 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (19)

ராணிகோவிந்த்

ராணிகோவிந்த்

தமிழ்நாடு
user photo

விக்னேஷ்

திருப்பூர் மாவட்டம் பல்ல
பீமன்

பீமன்

திருச்சிராப்பள்ளி
முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)

இவர் பின்தொடர்பவர்கள் (19)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
devarajan d

devarajan d

Bhavani

இவரை பின்தொடர்பவர்கள் (19)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
user photo

Divyagps

Bangalore
மேலே