இதுவும் கடந்து போகும்
பள்ளி படிப்பை சுமையாய் கண்டேன்..
கடின உழைப்பால் வெற்றி கொண்டேன்!
குடும்பத்தை பிரிந்து
அழுதேன்
கல்லூரி விடுதியில்..
காலம்
பிரிவை
பக்குவப்படுத்தியது!
பல முறை தோற்றேன்
வேலைக்கான
தேர்வில்...
விடா முயற்சியால்
வேலை கிடைத்தது!
காதல் கொண்டு தவித்து
காதலித்தவன் நிராகரித்து
வாழ்க்கையை தேடி அழைத்தேன்...
என் எண்ணத்தை மாற்றினேன்
துயரம் எண்ணத்தில் மட்டுமே
என உணர்ந்து..
மீண்டு எழுந்தேன்
வாழ்க்கை என் கையில் என!
சுதந்திரம்
திருமணத்தால்
பறி போகும் என்ற பயம்..
பயத்தை போக்கியது
திருமணமே!
ஒவ்வொரு நிலையையும்
கடந்தது..
இப்போதும்
ஆச்சரியமே!
இந்த
பாதையும்
பயணமும்
நடத்திய
பாடம்
இதுவும் கடந்து போகும்!!!