அகதி நான்

நிறமில்ல வானமாக
நீளும் வாழ்க்கை
நினைவின் தீவில்
நிபந்தனைகளுடன்
சேர்க்கப்பட்ட சில இன்பங்கள்
நிரந்தரமாக நிற்ணைக்கப்பட்ட
துன்பங்கள்
திணிக்கப்பட்ட திசைகள்
தினம் தோறும் மாறும் பாதைகள்
கிடைக்கப்பட்டதை உன்னு
கிடைக்கப்படாததை என்னும்
ஒரு நிரந்தர இல்லாத குரங்கு மனது
இரவில் இருந்து பகலை
பகலில் இருந்து இரவைத் தேடியும்
ஞானம் இல்ல ஞானியாயும்
ஒரு குருட்டு நம்பிக்கையுடன்
எனக்கான விடியல் உண்டே
என்ற கேள்வியுடன் அலையும்
அகதி நான் ....

எழுதியவர் : சண்முகவேல் (7-Aug-18, 4:20 pm)
சேர்த்தது : ப சண்முகவேல்
Tanglish : agathi naan
பார்வை : 156

மேலே