உயிர்துன்பம் மறையட்டும்

அன்பாக பழுகும் விலங்கையும் பாரு,
பழகிக் கெடுக்கும் நம்மையும் பாரு,
வாலில்லா மிருகங்களே! எல்லாரும் சௌவுக்கியமா?

சௌவுக்கியமில்லை என்றிட மனவால் பிடித்துத் தொங்கி ஆறாத கவலையாய் வாழ்க ஒழிக இரண்டையும் விட்டால் என்ன தெரியும் உங்களுக்கு?

உங்களுக்கு என்னதான் கோபமிருந்தாலும் ஒரு உயிர் துன்புறுவதைக் கண்டு நகைக்கலாமோ என்று கேட்டிட தினமும் லட்சக்கணக்கான உயிர்கள் துன்புறுகின்றன அவற்றையெல்லாம் காணாத நீங்கள் சொல்வதை நான் ஏன் கேட்கனும்?

கேட்கனும் உங்கள் எல்லோரையும் ஒன்று கேட்கனும். உங்கள் தெருவில் வருத்தம் தோய்ந்த முகத்தோடு உடம்பு சரியில்லாத பெரியவர் வர, காணாது சொல்லும் நீங்கள் இப்போது கரைவது ஏன்?

ஏனென்றால் பணம், கட்சி, அரசியல் ஆதாயம் என்று பெருகிய உங்கள் உள்நோக்கத்தை யாம் அறிவோம்,
கவலைப்படுவதால் காலன் தள்ளிப்போகான்.
கவலையை உதறித் தள்ளி உயிர் துன்பத்தில் இருந்து விடுதலை கிடைக்கவே பிரார்த்திக்கிறது.

பிரார்த்தனை கருணையின் காரணமாக, கிழிந்த இந்த சட்டையை உதறி எறிந்து வேறு புது சட்டையில் புகுந்து நலம்பெற எல்லாம் வல்ல இயற்கை அருள் செய்யட்டும்.
உயிர் வேதனை நீங்கி முக்தி பெறட்டுமே.
ஓம் நமச்சிவாய.
திருச்சிற்றம்பம்.

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (7-Aug-18, 5:32 pm)
பார்வை : 3323

மேலே