வாழ்ந்தும் வாழாதவர்களாக
காசுக்கு ஏற்ற பொருளில்லை கூறிவிட்டு
ஆசைப்படும் துறவியாய் வீடு வந்தேன்
பையில் இருப்பதை கையில் இல்லை சொல்லிவிட்டு
பணக்கார ஏழையாக வாழ்ந்து வந்தேன்
உங்களை போலவா உலகில் மனைவி கேட்டுவிட
அண்டை வீட்டில் அயலானோடு குடியிருந்தேன்
என்னிடம் இல்லாத திறமை உன்னிடம் என்ன
பக்கத்துக்கு இருக்கையை பகைவனுடன் பகிர்ந்தேன்
மனது கேட்பதை புத்தி மறுக்க
புத்தி மறுப்பதை மனது ஏங்க
இங்கு எல்லாமே இருந்தும் இல்லாததாக
நாம் எல்லோருமே வாழ்ந்தும் வாழாதவர்களாக!!