என் உயிரின் உறவு

என் உயிரின் உறவு நீயடி
என் எல்லா உறவும் நீயடி
என் உறவுகளுக்கு உயிர் கொடுத்தவள் நீயடி
தனின் தனியே தேட வேண்டாமென
இறைவன் படைத்து அனுப்பிட்ட
மொத்த உறவும் நீயடி...!!!

நீ என்னுடன் கொஞ்சிப் பேசுகையிலே
நேரம் போவது தெரிவதில்லையே
நேரம் போவதை உணர்கையிலே
மனது ரணமாய் கொதிக்கின்றதே
உன்னுடன் பேசிடும் தருணங்களே
என் வாழ்வின் வசந்தகாலங்களே...!!!

வழி(லி)கள் இல்ல என் வாழ்வில்
வழி(லி)கள் கொடுத்தவள் நீயடி
தறிகெட்டு சென்ற என் வாழ்க்கையில்
கடிவாளம் இட்டவள் நீயடி
வாழ்வின் முடிவு அறியாதெனக்கு
முடிவு என்பது நீயென காட்டியவள்...!!!

----------------------
என் உயிரின் உறவுக்கு - இனிய காதலர் தின வாழ்த்துக்கள்.
இன்று மட்டுமல்ல எல்லா நாட்களும் நமக்கு காதலர் தினம் தான்.

எழுதியவர் : விக்கிரமவாசன் வாசன் (14-Feb-15, 3:17 am)
பார்வை : 450

மேலே