காதல்

எல்லோரும் வாழ்வில் கொண்டாடும்
காதல் என்னுடைய வாழ்வில்
தள்ளாடுவது ஏனடி

பொய்யான அன்பு போதுமென்று
உன் பின்னாலே நான் வந்தேன்
பொய்யாக ஒரு மெய் சொல்லடி

உனக்காக காத்திருந்த நாட்கள்
காகிதமாய் நேற்று பெய்த மழைநீரில்
ஓடம் போல் ஆடுதடி

காதலின் வரையறை தெரியாமல்
காதலித்தேன் நானடி

நீ காதலிக்கும் அறிகுறி புரியாமல்
தான் தவித்தேன் பாரடி

உன் ஒரு பார்வை போதுமடி
என் இதயம் அதைத்தான் வேண்டுதடி
உன் பின்னே நிழலை வரதோனுதடி

அடி பெண்ணே ! என் உயிராய் நீ
வரமறுப்பதன் காரணம் கூறடி
என்னை காதல் கொள்ளடி....

எழுதியவர் : ஸ்ரீதரன்.சி (14-Feb-15, 3:31 am)
பார்வை : 147

மேலே