இத்தனை நடப்பதும் ஏன் பெண்ணே - இராஜ்குமார்

இத்தனை நடப்பதும் ஏன் பெண்ணே
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

மூடி வைத்தப் பேனாவோ - என்
விரலை மட்டும் விரட்டுதடி ..!
தீர்ந்துப் போன தாள்கள் எல்லாம்
மேசை மேல் முளைக்குதடி ...!

கசக்கிப் போட்ட கவிதையும்
கண் முன் வந்தது கைசேர
நீங்கிப் போன நினைவுகள் எல்லாம்
நீந்தி வந்தே நிரம்புதடி ..!

இமை மூடிப் போன விழிகளும்
விழித்து கொள்ள விரும்புதடி ..!
அணைத்து வைத்த கைப்பேசி
அடிக்கடி அலற துடிக்குதடி ...!

சுருங்கிப் போன முகத்தோலும்
விரும்பி கேட்டது வெந்நீரை ..!
உள்ளே உலவும் செல்லனைத்தும்
உன் கண்ணை பார்க்க ஏங்குதடி ..!

தேதி தொலைத்த நாள்காட்டி
தேடித் திரியுது இந்நாளை ..!
தூக்கி வீசிய தோல்பையும்
தொடர்ந்து வருகுது என்பின்னே ..!

அழுக்காய் வாழ்த்த ஆடைகளும்
சலவைச் செய்ய சொல்லுதடி ..!
சுற்றித் திரிந்த என் கழுத்து
அசையக் கூட மறுக்குதடி ..!

தோலைக் கருக்கும் இவ்வெயிலும்
தென்றல் போலத் தெரியுதடி ..!
என்றும் சிரிக்கா என்னிதழும்
எழிலாய் சிரித்து மகிழுதடி ..!

விட்டுக் கொடுக்கும் என் குணமும்
சொல்லித் தந்தது சுயநலத்தை ...!
சிதறிப்போகா என் சிந்தை - சிதறி
உடலை உடைத்து ஓடுதடி ...!

கர்வம் கொண்ட என் கனவு
கண்ணீர் வடித்துக் கலங்குதடி ..!
விட்டுப் போன என் உயிரும்
உடனே உடலில் இறங்குதடி ..!

இத்தனை நடப்பதும் ஏன் பெண்ணே
தேவதை நீ என் கண் முன்னே ..!

காதலை கேட்கிறேன் நினைவிழந்து
நிஜத்தை கொஞ்சம் திருப்பிக் கொடு ..!
என்றும் எனை நீ தேடி
அன்பை மட்டும் தந்து விடு ..!

சொல்லி விட்டேன் என் அன்பை
நானும் முடிவும் உன் கையில் ..!

சேர்த்து வைக்கிறேன் கனவுகளை
அன்பின் அடிமையாய் நாம் வாழ .
அழகியல் அன்பு அதுவாக ......

தேவதை நீ திரும்பிப் போனால்
என் தெருவும் தீப்பற்றி எரியுதடி ...!

காத்திருப்பேன் காதலுடன் - அன்னை
தமிழின் அரவணைப்பில் - உன்
நினைவுகள் துணையோடு ...!

- இராஜ்குமார்

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சென்ற வருடம் .. இதே நாளில் எழுதிய வரிகள் ...

எழுதியவர் : இராஜ்குமார் Ycantu (14-Feb-15, 6:19 am)
பார்வை : 715

சிறந்த கவிதைகள்

மேலே