உதிரம் உமிழும் காதல் - இராஜ்குமார்

உதிரம் உமிழும் காதல்
~~~~~~~~~~~~~~~~~~

காட்டுப் பூக்களின்
கழுத்தை நெறித்து
வர்ணம் உறிஞ்சி ...
வற்றிய வனத்தில்
உயிரினம் விழுங்கும்
விகார விலங்கின்
கால்நகம் கீறியதில்
உதிரம் உமிழ்ந்து
ஊமையானதடி என்காதல் ....

விடியலை விரட்டி
மூடுபனியின் முகத்தை
முரணோடு முடுக்கும்
நெருப்பின் தேகத்தில் ....
நெளியும் என்னிழலின்
நெற்றியை நனைக்க - என்
விரலறுந்து விழும்
குருதி குமிழிக்குள்
குமறும் என்காதலை
எந்த எழுத்தில் எப்படி எழுத ..??

- இராஜ்குமார்

எழுதியவர் : இராஜ்குமார் Ycantu (14-Feb-15, 4:47 pm)
பார்வை : 98

மேலே