புன்னை மரம்

என் தலைவா!
தேன் நிறைந்த
பூச்சொரியும்
இப்புன்னை மரத்தின்
முன் என்னோடு
காதல் விளையாட்டு
விளையாடதீர்.
இப்புன்னை மரம்
என் தங்கை என்று
சொல்லியே என் அன்னை
என்னை வளர்த்ததால்
அவள் முன் உம்மோடு
பேசி விளையாட
வெக்கமாக இருக்கிறது
அன்பே!
(வரலாற்று பாடல்)