நான் நானாக

சாலையில் செல்லும்போது
குத்தும் முள் முள்ளாக தோன்றவில்லை
உன் வார்த்தைகள் முன்பு..

விபத்தில் பட்ட காயம்
பெரிதாக வலிக்கவில்லை
உன் வார்த்தைகளில்
வாங்கும் அடியின் முன்பாக...

மனதின் வேதனை ரணமாகி
காயப்பட்டு காயப்பட்டு
உன் முன்
நான் அவமானப்பட்டாலும்
பரவாயில்லை...

எத்தனை ஜென்மம் எடுத்தாலும்
உன் முன்பாக நான் இருந்தால் போதும்...
அத்தனை அளவிற்கு
உன் மீது காதல் கொண்ட
நான் நானாக...

எழுதியவர் : சாந்திராஜி (14-Feb-15, 6:03 pm)
Tanglish : naan naanaaga
பார்வை : 689

மேலே