அஞ்சலியின் எங்கேயும் காதல்

பேனாவுக்கு எழுதுவதெல்லாம் காகிதத்தின் மேல் உள்ள காதல் ..
தென்றலின் வருகை கொண்டு நெற்கள் நாணம் கொன்று
தலையை சாய்ப்பது தென்றலோடு கொண்ட காதல்
மழைத்துளியின் வருகை கண்டு மலர்க சிரிக்குமே அது மழையோடு கொண்ட காதல்

மயில்கள் ஆடுவது நாட்டியத்தோடு கொண்ட காதல் ..
கண்ணனுக்கு புள்ளங்குழலோடு காதல் ..
பெற்ற அன்னைக்கு பிள்ளை . புன்னகை மீது காதல் ..
பெற்ற தந்தைக்கு பிள்ளைகளின் வளர்ச்சின் மீது காதல்
.
அரசியவாதி நடிப்பதெல்லாம் நார்காலி மீது கொண்ட காதல் ..
சூரியன் பூமியை சுற்றுவதெல்லாம் பூமி மீது கொண்ட காதல் ..
நச்சந்திரங்கள் ஒளிர்வதெல்லாம் சந்திரன் மீது கொண்ட காதல் .
கன்னி பருவம் வந்தால் தலையானை மீது காதல் ..
திருமண பருவம் வந்தால் தாலி மீது காதல் ..
வாழ்க்கையை வெறுத்தவனுக்கு மதுவோடு காதல்
.
.
பள்ளி பருவம் வந்தால் புத்தகத்தின் மீது காதல் .
அறுபது வயது வந்தால் இறைவன் மீது காதல் ..
மனிதர்களுக்கு எல்லாம் பணத்தின் மீது காதல் ..
கண்ணுக்கு இமை மீது காதல் ..

மீன்களுக்கு தண்ணியோடு காதல் ..
சிற்பிக்கு உளியோடு உள்ள காதல் தான் சிற்பமாய் ஒளிக்கின்றது .
முதூர் கண்ணிகளுக்கு மூடி வைத்த ஆசைகளோடு காதல் ..


எனக்கு இதயத்துக்கு உன்
மீது தான் காதல் ..

எழுதியவர் : அஞ்சலி (15-Feb-15, 2:28 am)
பார்வை : 102

மேலே