நானும் கிறுக்குகிறேன்
என் தாயின் கருவறைக்குள் என்னை ஒளித்து வைத்துவிட்டு
வாழ்க்கை பாதைக்கான வரை படம் கூட தராமல்
என் கண்ணில் படாமலே தப்பி விட்டான் கடவுள் என்ற பாதகன்,,,
என்னை விந்திலே வடிவமைத்தவன் என் விலா எலும்புக்கு சொந்தக்காரன் ,,,,,
கையில் காலணா கூட இல்லாமல் கருவறையில் சிறை இருப்பதாக உணர்ந்தேன்,,,
என்னை ஒளித்தவன் தேடி வருவான் என்ற நம்பிக்கையில் கருவினுள்ளே கண் மூடினேன்,,,
ஏதோ தெருவினுள் கண்விழித்தேன்,,,
வாடகை கொடுக்காமல் கரு என்னும் அறையில் கூட நீண்ட நாள் தங்க முடியாது என்று அப்போது புரிந்து கொண்டேன்...