ஓமனிதா
ஓ...மனிதா......!
உச்சியிலே
உலாபோகும்
உவகைமிகு
வெள்ளை நிலா...!
உதிர்த்ததொரு
சிரிப்பொலியின்
இனிமைப் பண்னாய்.....
சிவந்த தொரு
செந்நெல்லில்
செல்லும் தென்றல்...!
சிதையுடலை
சிதைக்கின்ற
செந்தனலுள்
செல்வதனால்.....
உயிறற்று, உயிர்க்
காற்றாய்.....!
தவழ்ந்தாலும் ,
தென்றல் தரும்
இனிமைபோல் ....
தெளிவான நறும்
இன்பந்தனை
உய்க்கும் காற்றினிடை
ஓர் சனமேனும்
உணர்ந்ததுண்டோ..?
ஓலமிட்டே உயிர்
வாழும் ஓ...மனிதா......
ஓ...மரம்டா.....! நீ....!