எமனுக்கு மடல் !

என் உயிர் தோழா
அன்பில் என் தந்தையை
மிஞ்சுகிறாய்
அரவணைப்பில் என் தாயை
மிஞ்சுகிறாய்
தோழ் கொடுக்கையில் என் அக்காவை
மிஞ்சுகிறாய்
எனக்கு துணை நிற்கும் போது அண்ணனை
மிஞ்சுகிறாய்
அனைத்தும் உன் உருவில்
நண்பன் என்ற பெயரில்
நட்பை உயிராய் காக்கிறாய்
நட்பின் ஆயிதம் கொண்டு
உன்னை பிரியா வரம்
வேண்டும் எனக்கு
அப்படி பிரிய வேண்டும்
என்றால் என் உயிரை
சேர்த்து பிரித்து விடு என்று
எமனுக்கு மடல் அனுப்புகிறேன் !