என்னை அறிந்தேன்

காதல் அறியேன்
காதலி அறியேன்
காதலியின் காதல் அறியேன்
காதலின் வலிகள் அறியேன்
காதலின் சுகங்களும் அறியேன்
காதல் காதல் காதலை அனுபவித்தறியேன்

தென்றலென புகுந்தாய் என்வாழ்வில்
அன்றே மாற்றினாய் என் கனவுகளை
காதலையும் சொல்லிக்கொடுத்தாய்
காதலிக்க கற்று தந்தாய்
முதன் முதலாக உணர்ந்துகொண்டேன்
எனக்குள்ளும் ஈரம் உண்டென்று

பாசத்தை பொழிந்திடும் தாயாய்
அறிவுரைகள் அளித்திடும் தந்தையாய்
கண்டித்து தண்டிப்பதில் அண்ணனாய்
படைக்கு அஞ்சிடா தம்பியாய்
குறும்புகள் செய்திடும் தங்கையாய்
சோகத்தில் தோள் கொடுத்திடும் தோழனாய்

இந்த மாற்றங்கள் எல்லாமே
தந்தவள் நீயடி
உனக்கென இதுவரை நான்
செய்தது எதுவுமில்லை
உன்னிடம் நான் இறைஞ்சி நிற்பது
வேசமில்லா உந்தன் பாசமன்றி வேறில்லை

எழுதியவர் : விக்கிரமவாசன் வாசன் (15-Feb-15, 9:11 pm)
Tanglish : ennai arinthen
பார்வை : 110
மேலே