அந்த 14 ம் தேதி
![](https://eluthu.com/images/loading.gif)
திறவுகோல் வரம்வேண்டி
பூட்டிற்குள்
தவம் கிடக்குமெனது
அதியுன்னதக் காதலின்
உச்சியிலிருந்து
ஜென்ம சாபல்யத்
தவத்தி லொன்றி
உள்ளத்தினத்தனைக்
கதவுகளையும்
திறந்துன்னைக்
கரம் கூப்பிக்
கூவியழைக் கின்றேன் !
நேசம் தழும்புமுனது
ப்ரிய ஊற்றிலிருந்து
உனக்கான காதலையொரு
வாழ்த்தினைப் போல்
பிறரறியாமல் பிரகடனப்படுத்துகிறாய்
ஒவ்வோராண்டும்
மிகத் துல்லியமாய்
இந்நாளில்
முன்னறிவிப் பேதுமின்றி
திடீரெனப் பொழியும்
பெருமழையின்
மண் வாசம் போல்
எங்கிருந்தோ
என்னக்குள் மணக்கிறாய் !
என்னுயிரின்
உலை கொதிக்கும்
மிகு தவிப்பில்
புலன்களனைத்தும்
தீப்பிடித்துத் தகிக்கின்ற
பிரளயமற்ற பிரியத்தில் -
உனது வியத்தலின்
விசை கொண்டு
வேய்கிறாய் எனது
வேய்ங்குழலின்
கூரையினை !
உயிர்சொல்லென
எனதுயிரில்
ஊறிப்போன
உனது
பெயர்ச் சொல்லொன்றையே
நாம ஜெபமென
சுவாசிக்குமெனது
அந்தராத்ம யாகத்தில்
நான் பெற்ற வரம்
" நீ யாருக்கு எப்போது
யாராகிலும் -
எனக்கு அவளல்லவா ".