பயணங்கள் முடிவதில்லை உன்னுடன் 555

உயிரே...
எங்கோ விழுந்த மழைத்துளியில்
வீசும் மண்வாசனைபோல்...
எங்கிருந்தோ வந்து நின்றாய்
என் கண்முன்னே...
என்னை நான் யாரென்று
தேடிகொண்டிருந்த வேளையில்...
நீ என்னை
தொடர்ந்திருகிறாய்...
என் கைகளில் இருந்து தவறி
விழுந்த ஒற்றை காகிதம்...
என்னை உன்னிடமும்
உன்னை என்னிடமும்...
அறிமுகம் செய்தது
காகிதம்...
நிழலை போல் தொடர்ந்தோம்
இருவரும்...
எனக்குள்ளும் உனக்குள்ளும்
இருக்கும் காதலை சொல்லாமலே...
சொல்லாத என் காதலை
கிறுக்கினேன்...
கிறுக்க பட்ட காகிதம் உன்
கைகளில் கிடைதுவிடவே...
நான் தலை கவிழ்ந்தேன்...
நீயோ புன்னகையுடன்
என்னை பார்த்தாய்...
உன் கிறுக்கலும் காதலும்
அழகு என்றாய்...
புன்னகையோடு நான்
தலை நிமிர...
நீ புருவம்
உயர்த்தினாய் மெல்ல...
என் உயிரே முடிவில்லா
பயணத்தில்...
நம் பயணிக்க வேண்டும்...
வாழ்க்கை என்னும்
பயணத்தில்...
என்றும் காதலோடு
உன்னுடன்.....