கல்லூரியின் நினைவுகள் ..........
நண்பா !!!!!!
சந்தித்த நாட்களில் எல்லாம் .....
நாளை நாளை என..
நாட்களை கழித்தோம்......
நாட்காட்டியில் உள்ள காகிதம் போல .....
காகிதமும் குறைந்தது ......
நம் கல்லூரியின் .....
கனவுகளும் கலைந்தது ......
கல்லூரியில் உறங்கி .....
கனவுகளை வளர்த்தோம் ........
நிஜங்களை சுமந்து ........
நினைவுகளுக்கு விடை தந்து ........
நீங்காமல் சேருந்து .....
இருந்த நாட்கள் ........
தூங்காத எத்தனை இரவுகளில் .....
நிலைவையும் விலை பேசினோம் ......
பட்டங்களை பெறுவோமா !!!!!
என தெரியாமலே?????
எண்ணற்ற கனவு ....
கட்டடங்களை கட்டினோம் .........
நித்தம் நித்தம் கதை பேசியே !!!!
தத்தம் நட்பை வளர்த்தோம் ....
உறவுகள் இல்லை என்றாலும் .....
உனக்காக நானும் ......
எனக்காக நீயும்
எத்தனை எத்தனை இரவுகள் ......
எல்லாம் என்றும் .....
மறவாத நாட்கள் !!!!!!!!
நம் கால் படும் கல்லூரி சாலைகள் .....
கூட நமக்கு சோலைகளாக தான் ......
எத்தனை எத்தனை .....
குறும்பு வேலைகள் ...........
அரும்பு மீசைகளை ....
அழகு நிலையங்களில் .....
அழகு பார்த்த நாட்கள் ..........
பருவ தேர்வு வந்தால் ..........
அக்கம் பக்கம் மட்டுமே .....
அண்ணாந்து பார்போம் ....
விடை பக்கங்களை பார்க்காமலே !!!!
விடை எழுதுவதை விட .....
எப்போது நடை கட்டுவோம் ......
என்பதையே கால்கள் விரும்பும் .........
ஓடி ஓடி ......
ஆடி பாடியே ........
ஆண்டுகளை கழித்தோம் ........
சின்னஞ்சிறு வாண்டுகள் போல ........
எண்ணி பார்க்க முடியாத .....
நாட்களை .....
எண்ணில் அடங்காத .....
நினைவுகளை ......
ஓரிரு சொல்லில் ..........
சுய குறிப்பாக எழுதி விட்டு .........
கண்ணீரை மட்டுமே .....
காணிக்கை தந்து .........
தணிக்க முடியாத சோகங்களோடு ......
சொல்லி கொண்டே !!!!!!!
விடை பெற்று ........
நட்புடன் நடை கட்டினோம் .
நிஜங்களுக்கு விடை தந்து ......
நெஞ்சங்களுக்கு ஆறுதல் தந்து .......
காலம் செய்த வஞ்சம் ......
என்றே விடை பெற்று ........
காணமல் தஞ்சம் அடைந்தோம் .........
காண்போமா என நெஞ்சங்கள் ஏங்க !!!!!!!!!!