காதலின் துணையோடு

எனை தாண்டி
போகும் உன் காலடி
உனை பார்த்துகொண்டே
இருக்கும் என் விழி !!...
நீ விடும் மூச்சுக்காற்றை
சுவாசித்துக்கொண்டே
வாழ்கிறது என் காதலடி!!..

பூக்களின் புன்னகைகளை
உன் ஒற்றை சிரிப்பில் வைத்தாயே...
அதனால் தான்
காதலின் நூலை கொண்டு
என் இதயத்தை தைத்தாயோ??
உன் ஊசி போன்ற கண்களால்....

பாலைவன கானல் நீராய்
உயிரில்லாமல் வாழ்ந்த என்னை
சோலைவன காதல் நீராய்
உயிர் பெற செய்தவள்
நீதானே!!....
தினந்தோறும் யாசித்தேன்
நொடிப்பொழுதும் சுவாசித்தேன்
உனைநானே!!....

நான் உன்னோடு
ஒற்றை நொடி வாழ்ந்தால்
என் ஜென்மம் ஈடேறுமே ....
நீ இன்றி நான் இறந்தால்
மறுஜென்மம் எடுத்து
உன்னோடு சேர்வேனே!!...
இவ்வுலகில் நான்.....
"காதலின் துணையோடு"

எழுதியவர் : பிரதீப் நாயர் (16-Feb-15, 4:57 pm)
சேர்த்தது : பிரதீப் நாயர்
Tanglish : kathalin thunaiyodu
பார்வை : 54

மேலே