இதுதான் காதலா

பாலைவனத்தில் நடந்தேன்
உன் நினைவுகளோடு
தாகம் தெரியவில்லை

பனி மலையில் ஏறினேன்
உன் நினைவுகளோடு
குளிர் தெரியவில்லை

கானகத்தில் நடந்தேன்
உன் நினைவுகளோடு
பயம் தெரியவில்லை

கடல் அலையில் நீந்தினேன்
உன் நினைவுகளோடு
தூரம் தெரியவில்லை

தெரியவில்லை புரியவில்லை
பெண்ணே இதுதான் காதலா ?

எழுதியவர் : கவியாருமுகம் (16-Feb-15, 5:12 pm)
சேர்த்தது : கவியாருமுகம்
பார்வை : 64

மேலே