கருகிய மொட்டுக்கள்

கண்ணுக்கு
இட்ட மை காயலையே
என் கண்மணி
வெச்ச பூ வாசம்
மாறலையே
கஞ்சி போட்ட
சட்டை
கசங்களையே
நீ கையசச்ச
காட்சி மாறலையே
காத்துல நீ கொடுத்த
பறக்கும் முத்தம்
என் கன்னத்தை இன்னும்
சேரலையே.
நீ கதறின
சத்தம் இன்னும்
காத்துல கேக்குதே!
கருகி போன உன்னை
பார்த்தபின்னும்
பாவி உசிர் போகலையே!
எட்டு வருஷம்
போன பின்னும்
காத்து வெளியில
உன் துடிப்பு
காதில கேக்குதடி
என் செல்லமே !
தண்ணீ பாட்டில்ல கூட
பாதுகாப்ப பாக்கற
அரசாங்கம்
குழந்தைங்க உசிரையும்
பொது உடமையா பார்பதெப்போ?
நியாயம் கிடைப்பதெப்போ?