கவிதை

கவிதையே தெரியுமா
ஒரு கவிஞன் நானில்லையே ....
கவிஞனாய் மாறவே
பல கவிதை எழுதுகின்றேன் ...
கவி சொல்ல துடிக்கின்றதே உதடுகள்
கவி எழுத துடிக்கின்றதே விரல்களும்

கவிதையே தெரியுமா
ஒரு கவிஞன் நானில்லையே ....
கவிஞனாய் மாறவே
பல கவிதை எழுதுகின்றேன் ...

பெண்ணை எழுதிவிடவா – அவள்
கண்ணை எழுதிவிடவா
விண்ணை எழுதிவிடவா
விண்மீனை எழுதிவிடவா

இரவினில் தோன்றும் நிலவினை பற்றி கவியொன்று எழுதவா ...
விழியினை காக்கும் இமைகளை பற்றி கவியொன்று எழுதவா ...
என் காதலை எழுதவா ....

கவிதையே தெரியுமா
ஒரு கவிஞன் நானில்லையே ....
கவிஞனாய் மாறவே
பல கவிதை எழுதுகின்றேன் ...

இயற்கையை எழுதவா ...
முற்றமிழினை எழுதவா ...
மழழையை எழுதவா – அதன்
அழகினை எழுதவா...

காதலில் விழுந்த தேவதாஸ் பற்றி
கவிதை நான் எழுதவா ...
நினைவிலே இருக்கும் காதலி பற்றி
கவியொன்று எழுதவா ...
காயங்கள் எழுதவா ...

எழுதியவர் : சிவா அலங்காரம் (17-Feb-15, 12:07 pm)
Tanglish : kavithai
பார்வை : 77

மேலே