தலையெழுத்து எது தலையெழுத்து

..."" தலையெழுத்து எது தலையெழுத்து ""...

பிறப்பிற்கு முன்னால் இருக்கும்
எழுதப்படாத எழுத்து இதுவரை
யாராலுமே படிக்கப்பாடாததும்
அதன் பெயரே தலையெழுத்து !!!

தலையெழுத்து இது இன்னும்
மறைவாய் இருப்பதால்தான்
மனிதனின்னும் மனிதனாய்
வாழ்க்கையை வாழ்கின்றான் !!!

ஒவ்வொரு கிறுக்கல்களிலும்
ஒவ்வொரு வரையறையுண்டு
மண்ணிலே புதையுண்டயெல்ல
கரித்துண்டுகளும் வைரமாகாது !!!

பிரித்தாய்ந்து பட்டைதீட்டினால்
சொலிக்கிற தன்மையைப்பெரும்
கரித்துண்டை கண்டேடுக்காமலே
சலிப்பில் சங்கடத்துக்குள்ளாகி !!!

பெரும்பாலும் மனிதன் தோண்டி
தோண்டியே களைத்துவிடுகிறான்
தேவைகள் உள்ளவரை தேடலா
தேடல்கள் உள்ளவரை தேவையா !!!

இறைவன் அளித்திட்ட வரமாய்
ஒன்றன் முடிவில்தான் ஒன்றின்
துடக்கம் சுழலும் சக்கரம்போல்
வாழ்க்கையிங்கு இயங்குகிறது !!!

அழகாய் சிரிக்கும் அந்த தூரத்து
மஞ்சள் நிலாவின் வட்டத்தின்
துடைக்க முற்றுப்புள்ளி எவை
விடைகாணமுடியா வினாதான் !!!

திறமைகள் இங்கு பாராட்டப்பட
தனித்தே ஒவ்வொருக்கொருவர்
சற்றேயது மாறுபடவேண்டும்
அதுதான் இங்கு தலையெழுத்து !!!

இதுதான் எனக்கான விதியென்றே
சொல்லி இங்கு வீழ்ந்தோருமுண்டு
விடுவேனா நானிதையென்றே விடா
முயர்ச்சியில் வென்றோருமுண்டு !!!

என்றும் உங்கள் அன்புடன் ,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்...

எழுதியவர் : அப்துல்ஹமீது(எ)சகூருதீன்.. (18-Feb-15, 2:35 pm)
பார்வை : 231

மேலே