பசியின் ஏக்கங்கள்

உங்களை போல் - எனக்கும்
வயிற்றையூம் பசியையூம்,
தந்துவிட்டான் இந்த கடவுள்..!
ஆனால் ஏனோ அதை மறந்தும்
எங்களை சிலையாக எண்ணியும்
விளையாடுகிறான்...!

பிழைக்க உழைக்க
திடமும் மனமும் இருக்கிறது
பாவம் எங்களுக்கு பணி தர தான்
இங்கு எவருக்கும் மனம் இல்லை..!
இல்லை என்பதாலே கையோந்தி நின்றேன்
இல்லை இல்லை என்பதே பதிலாக இருந்தது.

அய்யா பசிக்கிறது புசிக்க ஏதாவது தாருங்கள் என்றேன்
சீ போ என்றார்கள்...!
அம்மா உண்டு நாளாச்சு உணவு தருவயா என்றேன்
கண்டும் காணதாதுபோல் முகம் திருப்பிக்கொண்டர்கள்.
வாட்டியது பசி.....வருந்தினேன் என்ன பிறப்பு என்று
விரட்டியது பசி....வெறுத்தேன் இவ்வுலகை..!

அனாதையாகிய எனக்கு பசிக்க கூடாதா..?
பசித்தால் உணவு கிடைக்கதா..?
அதிகமாக கேட்கவில்லை
என் பெயர் எழுதிய பருக்கையை கேட்கிறேன்.
தர மனம்யில்லையா இல்லை என்பெயரை
இறைவன் எழுதவேயில்லையா..!

அம்மா தாயே ஜயா என் பசியை போக்குங்கள்
இல்லை....என்னே புதையுங்கள் இவ் மண்ணில்....
புதைக்கும் போது
ஒர் நெல் மணியும் சில விதைகளையும் தூவுங்கள்....
என் தம்பிமார்கள் பசியாறுவார்கள்...நாளை.
பசியுடன்...ஓர் ஜிவன்.

ஃதங்கம்

எழுதியவர் : தங்கமாரியப்பன் (18-Feb-15, 2:28 pm)
Tanglish : pasiyin EEKKANGAL
பார்வை : 686

மேலே