புகுந்த வீடு
புகுந்த வீடு
*மகிழ்ச்சி கடல் -அதில்
அலைகளை வென்றிடுவோம் !
* வெற்றி பாதை -அதில்
வீறு நடை போட்டிடுவோம் !
* அணையா விளக்கு -அது
நாற்புறமும் ஏற்றிடுவோம் !
*காதல் கோட்டை -அது
கட்டி முடித்திடுவோம் !
* அன்பை பொழிந்திடுவோம்-அதில்
ஆதரவாய் வாழ்ந்திடுவோம் !
* சொந்தங்கள் நிறைய -அதில்
புன்சிரிப்பு பூத்திடுவோம் !!
சிவ.ஜெயஸ்ரீ