முதிர் கன்னி

காலம் கடந்து - இன்னும்
கண்ணனின்
வரவிற்காக காத்து நிற்கின்றாள் ...
அவன் எப்பொழுது வருவானோ ...?
தன்னில் சேர்த்துவைத்த
அத்தனை ஆசைகளோடும்
காத்து நிற்கின்றாள் ...
தாவணி அணிந்த நாள்
முதலாய்...
அவன் எப்பொழுது வருவானோ...?
கனவில் கிடைத்த ஸ்பரிஷங்களோடும்
நினைவில் தொலைத்த நிம்மதிகளோடும்...
காத்து நிற்கின்றாள்...
அவன் எப்பொழுது வருவானோ ...?
கன்னியும் கண்ணீரில்
கரைந்து நிற்க ..
அதோ...!
வந்தான் அந்த
மாயவன்...
மை எழுதிய அந்த கண்ணின்
நீர் துடைக்க..
பரி தவித்த அந்த
பாவையின் கரம்
பிடிக்க...
இத்தனை காத்திருப்புகளும்
எனக்கு மட்டும் தான் என்று
மாயை எனும் வரதட்சணையை
வென்று ........

எழுதியவர் : (18-Feb-15, 1:15 pm)
Tanglish : mudhir kanni
பார்வை : 101

மேலே