தாயே நீ வாழ்க
தாயே நீ வாழ்க ...!
தாகம் தீர்க்கும் குடமாய்
தங்கம் மிஞ்சும் குணமாய்
அன்பு என்னும் உறவாய்
ஆயுள் எனக்கு தந்தாய்..!
பிள்ளை எந்தன் மூச்சை
பிறந்தும் வளரும் பேச்சை
அறிவில் விதைக்கும் தந்தை
அறிய வைத்தாய் தாயே..!
சொல்ல வார்த்தை யில்லை
சோர்வு யென்று மில்லை
அள்ளி வூட்டும் சோற்றில்
ஆர்வம் குறைவ தில்லை..!
துள்ளித் திரியும் என்னை
துவண்டு போகக் கண்டு
மார்பில் சுமந்து துடித்தாய்
மழையை போல அழுதாய்..!
வளர்ந்த பிள்ளை யென்று
வொதுங்கி நிற்கும் போதும்
வாரி அணைக்கும் தெய்வம்
வடிவில் வந்தாய் நீயே..!
கல்லில் வடித்த தெய்வம்
கண்ணில் பார்த்த உருவம்
கடவுள் என்று சொன்னால்
கருவை சுமந்த “தாய்” யார்..?
என்னை பெற்றத் தாயே
எந்தன் தெய்வம் நீயேயென
உலகில் இருக்கும் வரையில்
உரக்கச் சொல்லி வாழ்வேன்..!
உணரும் தெய்வம் நீயே...!