என்றும் சிறு இனம்

என்றும் சிறுஇனம் சரியில்லை?
ஒன்றும் எனக்கும் புரியவில்லை
வீண்தான் பேசி விளக்கிட முயன்றால்
விளையும் பயனும் தெரியவில்லை.

நான்தான் தலைவன் என்கின்றான்.
நாடகம் எழுதியும் நடிக்கின்றான்.
மான்தான் நிசத்தில் ஓடுதென்றும்
மயங்கியும் நரியிடம் மாட்டுகின்றான்.

தேன்தான் வாயில் ஒழுகுதென்பான்.
தேடியும் தொண்டன் ஏந்தி நிற்பான்.
தான்தான் மந்திரத் தலைவன் என்றும்
தந்திரம் உதிர்த்து தளையிடுவான்.

பேன்தான் தலையில் மேய்ந்தாலும்
ஏன்தான் நசுக்க யோசிக் கின்றான்.
சாண்தான் வயிறதன் சமரசத்தால்
ஊன்தான் உயிரென யாசிக்கின்றான்.

ஆண்தான் பெண்தான் வேற்றுமையேன்?
வீண்தான் தாழ்மை கீழ்மை யார்?
வான்தான் நமக்கு மேலுண்டு.
ஏன்தான் அடிமை யாரிங்கு?

தான்தான் தர்மம் ஆள்வோற்கு.
நான்தான் கர்மம் வீழ்வோற்கு.
வான்தான் சாட்சி வாழ்வோற்கு.
மீன்தான் காட்சி மீள்வோற்கு.

கொ.பெ.பி.அய்யா.

எழுதியவர் : கொ.பெ.பி.அய்யா. (18-Feb-15, 5:36 pm)
பார்வை : 65

மேலே