மின்ன மறந்த மின்மினி

சுறுசுறுப்பான அலுவலில்
உறங்கிப்போன சிந்தனை..
விழித்துக்கொள்ள விடுப்பு வேண்டியது..
எண்ணற்ற சிந்தனை ஒரு நாளில்
அரைகுறையாய்..
என்ன எழுத? எப்படி எழுத?
முடிவிலி கேள்விகள் என் மனதில்...
மின்ன மறந்த மின்மினி
மீண்டும் மின்ன நான் என் செய்யேன்?
ஒன்று நிச்சயம்
என் ஆறாம் விரலின் உதிரம் தீரும் வரை
நிறுத்துவதில்லை என்று.....