-- -- -- உழவனின் வலி -- -- --
![](https://eluthu.com/images/loading.gif)
-- -- உழவனின் வலி -- --
மழையைப் பார்த்தே நட்டேன் நாத்து
மழைப் பொய்க்க மண்ணோடே போச்சு
மாட்டுச் சாணமும் மாசாப் போச்சு
மானிய உரமும் மாண்டுப் போச்சு
உளுந்த விதைக்க உண்டியல உடைச்சேன்
உழவு செழிக்க உண்ணாம உழைச்சேன்
விதைச்ச எனக்கு விளைபேசவும் உரிமையில்ல
ஊருக்கே விடிஞ்சாலும் விடியாது எனக்கு
பத்துஏக்கர் பயிருக்கு அவசியமா சமாச்சாரம்னு
பத்துமாடிக் கட்டடத்துக்கு கடத்துறான் மின்சாரம்
பஞ்சமும் பட்டினியுமே பங்காளியா ஆச்சு
பசிக்கு உணவளித்த பசுவும் செத்துப்போச்சு
கரைவேட்டிக் காரனெல்லாம் கண்டெடுத்த களைப்புல
மீட்டெடுத்த காவிரியத்தா கண்ணுல காட்டல
வாங்கிவச்ச பூச்சி கொல்லியில மிச்சம் வச்சேன்
வானம் பொழியலைனா குடிச்சிடுவே சத்தியமா