பெண்கள்

பெண்கள்

* அன்று

வீட்டிற்குள் அடைந்திருந்தோம்
வெளிச்சத்தை நோக்கி
தவம் இருந்தோம்
துயில் கொள்ள மறந்திருந்தோம்
துடித்திருந்தோம் நாளெல்லாம் !!
வழி நோக்கி விழி பதித்திருந்தோம்
வாய்ப்பிற்கு ஏங்கி நின்றோம் !!

* இன்று

இராக்கெட்டிலும் சென்றிட்டோம்
இராணுவத்தில் இணைந்திட்டோம்
வானத்தையும் எட்டி பிடித்திட்டோம்
வானமாய் உயர்ந்து நின்றிட்டோம் !!

* நாளை

அண்டை கிரகங்களில் துள்ளி திரிந்திடுவோம்
அகிலம் எங்கும் கோலாட்சிடுவோம்

எங்கும் முதலாய் விளங்கிடுவோம்
முடிவில்லா வளர்ச்சி அதில்
முன்னேறிடுவோம்

காலத்தின் கட்டாயத்தை உணர்த்திடுவோம்
காலமெல்லாம் பார் போற்ற பவனி வருவோம் !!

சிவ.ஜெயஸ்ரீ

எழுதியவர் : சிவ.ஜெயஸ்ரீ (19-Feb-15, 1:31 pm)
சேர்த்தது : சிவ ஜெயஸ்ரீ
Tanglish : pengal
பார்வை : 97

மேலே