உன் கண் மையால் எழுதிய கவிதை
![](https://eluthu.com/images/loading.gif)
ஏஞ்சலே...!!!
நான் பிறப்பு எடுக்கும் போது உனக்காக என்னிடம் ஒரு பரிசுப் பொருள் கொடுத்து அனுப்பப்பட்டது.
அது நீ பிறக்கும் முன்பே உனக்காக உருவாக்கப்பட்ட பரிசு.
அதன் மீது முகவரியாக உன் முகம் மட்டும் வரையப்பட்டு இருந்தால் உன்னை தேடிக்
கண்டுபிடிக்க இவ்வளவு காலம் தேவைப்பட்டு இருக்காது.
ஏழு கடல், ஏழு மலை தாண்டி உன்னிடம் நான் வரவில்லை.
என்றாலும் எண்ணற்ற வலைத்தளங்கள் தாண்டி
உன்னிடம் பத்திரமாக சேர்க்க வந்து இருக்கிறேன்.
அதன் பெயர் - காதல்.