பயிற்சி பெறுக கவியாக்கம் 6
தோழமை நெஞ்சங்களே ....
வானம் எனும் தலைப்பில் கவிஜி எனும் ஒரு படைப்பு கீழே அளித்துள்ளார்...அதனை நான் தொடர மீண்டும் கவிஜி தொடர்ந்தார்...நீங்களும் தொடரலாமே...
வானம்
யார் திறந்த
ஜன்னல்
இந்த வானம்....
திறந்தே கிடக்கிறது.....
-----கவிஜி
அகன்
சன்னலைத் திற ...காற்று வரட்டும்..!!!-
கவிஜி
காற்றையே திறக்கும் ஜன்னலை தேடுகிறேன்......
அகன்
வானத்தைப் பிள..
கவிஜி
பிளந்த வானத்தில் பூத்து
நின்றது ஒரு ஜன்னல்......
அகன்
ஜன்னல் அல்ல அது.:
அது காற்றின் மறுவுரு...
உழைத்தவன் வியர்வை
விண்ணேகிச்சென்று
சில்லிட்டு உறைந்த
உழைப்பின் படிமம்...
கவிஜி
சரி
அகன்
அவ்வளவுதானா.....
எனக் கேட்டு அழும் சன்னலை
மூடுகிறது வானம்
புழுங்கி வருந்துகிறது காற்று..
உங்கள் கவிதையின் தொடர்ச்சி:
மூடியது வானம்;
புழுங்கியது காற்று;
இருவரையும் சமாதானிக்க வந்தது மேகம்.
மேனி திறந்து பொழிந்தது மகிழ்மழை.
காற்றும் வானும் சிரித்தன.
அவற்றிலும் அதிகம் சிரித்தான் உழைத்தவன்!
சிநேகமாய்
புதுயுகன்
முரளி
யாரங்கே!
ஜன்னலை மூடுங்கள்
நிலாப் பெண் ஆடை மாற்றுகிறாள்!
சரவணா •
உழைத்தவன் சிரித்தான் ...
உலகம் சிரித்தது... பதிலுக்கு
தன்னில்
மின்மினிகள் முளைக்கவிட்டு
கூடவே நானும் என்றது
வானம்............
Murali TN •
ஜன்னலை மூடாதீர்கள்
விண் மீன்களுக்கு வேர்க்கிறது....
JINNA •
அவர் சிரிப்பில் முத்துகள் விளைந்தன
கடலில் அல்ல காட்டில்...
உழைத்தவன் சிரிப்பு
அதிகநாட்கள் தொடரவில்லை
அடுத்து வந்த அறுவடை நாளிலும்
அதிகமாய் அட்டகாசமாய்
வீசியது காற்று பேய்த்தனமாய்
சிரித்தது இடிமழை !
கதிரறுக்கும் நிலையில்
எங்கும் வெள்ளமோ வெள்ளம் !
தொடரட்டும் ....
ஜி ராஜன்
arunvaali •
வேர்வை விட்டு விதைத்தவன்
வாய் விட்டு சிரித்தான்
வேர் விட்டு முளைத்தன விதைகள்
யார் துட்டு கொடுப்பார் உரமிட எண்ணி
வந்த சிரிப்பும் வரப்பு வழி சென்றது....
சுசிந்திரன்
வயலுக்கு வந்தவனிடம்
வட்டிகேட்டு வாதாடியது
நாற்று.....
தொலைத்ததைத் தேடி
ஜன்னலைத் திறந்தபோது
தொலைந்துபோன வயலைத் தேடினான்
குடியானவன்
அடுக்கு மாடி
குடியிருப்புகளுக்கிடையே ... சுசீந்திரன்.
karguvelatha •
முளைத்த முத்துக்களை
அறுவடை செய்ய
விழைந்தான் விளைத்தவன்
கை வைக்கும்முன்
வான் ஜன்னல்
மீண்டும் திறக்க
மழையாய்ப் பொலிந்தே
அறுவடை நின்றுபோக
அந்தோ பரிதாபம்
JINNA •
விவசாயிகளின் சிரிப்பில்
விளைந்தது முத்துக்கள்
கடலில் அல்ல காட்டில்...
பழனி குமார் •
சூரியனின் வெப்ப சூட்டிலிருந்து
குடையாய் விரிந்து காக்கிறது
வாழும் உயிர்களை பூமியில் வானம் -
அதுதான் பகல்பொழுது !
உழைக்கும் உள்ளங்களையும்
ஓய்வெடுக்கும் உயிர்களையும்
போர்வையாய் பரந்து காக்கிறது வானம் -
அதுதான் இரவுப்பொழுது !
எப்பொழுதும் எவ்வகையிலும்
நமை காப்பது வானமே ...
--- பழனி குமார்
vidhya •
மேகத்திரை போர்த்தித்
தூங்குகிறது சன்னல்
குளிரில் நடுங்குகிறது
காற்று,,,,,,,,,
-வித்யா
Umai •
மானிய விலையில் உரம்
மாவட்ட ஆட்சியாளர்
சொன்னது மனதில் பட
மிச்சமாய் இருந்த
மனைவியின் தாலிச்சரடு
கை கொடுக்க
ஓட்டமும் நடையுமாய்
உரம் வாங்க செல்கிறான்.
வேளாண் அலுவலர்
கையிருப்புக் காலி என்றார் ...
காரணம் சொல்லாமலே புரிந்தது
பொட்டாசு உரமெல்லாம்
பட்டாசுத் தொழிற்சாலை
வண்டியில் ஏற்கனவே
ஏறி இருந்து விட்டன .
எவர் விதியை எவர் நோக...
அடுத்து யார் ...???
அடுத்து தொடர்வது யார் ????????.