ரஞ்சித் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : ரஞ்சித் |
இடம் | : யாழ்ப்பாணம் |
பிறந்த தேதி | : 30-Apr-1988 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 18-Feb-2015 |
பார்த்தவர்கள் | : 96 |
புள்ளி | : 37 |
தலையணை நனைந்த
பல இராப் பொழுதுகள்
இவை தான் என் காதல் எச்சங்கள்.
எல்லாமே வேடிக்கை தான்
எதுவும் நமக்கு நடக்காத வரை
சில தருணங்களில் பலமாகவும்
சில தருணங்களில் பலவீனமாகவும்
அமைந்து விடுகிறது
பிறரின் மேல் நாம் வைக்கும் நம்பிக்கை.
உனக்கும் எனக்கும்
ஒரு அறிமுகமில்லை
பேருந்தில் உன்னை
பார்க்காதவரை...!
நம் விழிகளின்
பார்வை உரசலில்
உனக்கும் எனக்கும்
ஓர் புரிதல் ஒப்பந்தம்...!
அமர்ந்திருக்கும் உன்னிடம்
என் புத்தகங்களை
தந்துவைப்பதில்
உன் மனதில்
இடம்பிடித்துவிட
முயற்சி...!
என் புத்தகங்களை
திரும்பபெறுகையில் நிகழும்
உன் சுண்டுவிரல் தீண்டலில்
என் கற்பனைகள் சிறகடிக்கும்
அதிசயம்...!
ஆனால் நீ அமர்வதுக்கோ
இடமில்லை...
எனவே என்
கற்பனைக்கும்
உயிர் இல்லை...!
தினம் நாற்பத்தைந்து நிமிட
பயணத்தில்
எட்டு மணிநேர
என் கனவுகளை
நனவாக்கிவிடும் அவசரம்...!
உன் நிறுத்தம்
வந்துவிட்டதும
என்
பேனா காத்திருக்கிறது
உன் வரவுக்காக அல்ல
கண்ணீருக்காக....!!!
கதை பேசும் உன் கண்களை
கனவாகிப் போக விடமாட்டேன்.
ஏஞ்சலே...!!!
நான் பிறப்பு எடுக்கும் போது உனக்காக என்னிடம் ஒரு பரிசுப் பொருள் கொடுத்து அனுப்பப்பட்டது.
அது நீ பிறக்கும் முன்பே உனக்காக உருவாக்கப்பட்ட பரிசு.
அதன் மீது முகவரியாக உன் முகம் மட்டும் வரையப்பட்டு இருந்தால் உன்னை தேடிக்
கண்டுபிடிக்க இவ்வளவு காலம் தேவைப்பட்டு இருக்காது.
ஏழு கடல், ஏழு மலை தாண்டி உன்னிடம் நான் வரவில்லை.
என்றாலும் எண்ணற்ற வலைத்தளங்கள் தாண்டி
உன்னிடம் பத்திரமாக சேர்க்க வந்து இருக்கிறேன்.
அதன் பெயர் - காதல்.
நதியோடும் திசைகண்டே மீனோடும்
நடுவானின் தடம்கண்டு நிலவோடும்
கதிகொண்டு காற்றோடும் திசைமாறும்
கனவென்றே வாழ்வோடு விதியோடும்
மதிகொண்டே உணர்வோடு மயங்காமல்
மனங் கொண்டு நற்பாதை சென்றாலே
புதிதென்ற நல்வாழ்வும் உண்டாகும்
புவனத்தில் நம்முள்ளம் இருந்தாளும்
கருவாக இருந்திங்கு புவிகண்டேன்
கனவோடு பெருவாழ்வின் சுகம்கொண்டேன்
இருகாலும் விழிகாணா இருள் சென்றேன்
இடருக்குள் நடந்தோடி வலி கொண்டேன்
தெருவீதி கிடந்தும் உள் திமிர்கொண்டேன்
தினவோடு பழிகொண்டு தொலைகின்றேன்
ஒருநாளில் ஒளியொன்றின் திசை காண
உருகி மெய் உணர்வோடு தொடர்கின்றேன்
சதிகொண்டு பதிகாணும் இல்வாழ்வில்
சமமின்றி மனம்யாவும் துயர்காணும்
வித