அந்த கச்சேரி வீதியில்

உனக்கும் எனக்கும்
ஒரு அறிமுகமில்லை
பேருந்தில் உன்னை
பார்க்காதவரை...!

நம் விழிகளின்
பார்வை உரசலில்
உனக்கும் எனக்கும்
ஓர் புரிதல் ஒப்பந்தம்...!

அமர்ந்திருக்கும் உன்னிடம்
என் புத்தகங்களை
தந்துவைப்பதில்
உன் மனதில்
இடம்பிடித்துவிட
முயற்சி...!

என் புத்தகங்களை
திரும்பபெறுகையில் நிகழும்
உன் சுண்டுவிரல் தீண்டலில்
என் கற்பனைகள் சிறகடிக்கும்
அதிசயம்...!

ஆனால் நீ அமர்வதுக்கோ
இடமில்லை...
எனவே என்
கற்பனைக்கும்
உயிர் இல்லை...!

தினம் நாற்பத்தைந்து நிமிட
பயணத்தில்
எட்டு மணிநேர
என் கனவுகளை
நனவாக்கிவிடும் அவசரம்...!

உன் நிறுத்தம்
வந்துவிட்டதும்
இறங்கி சென்றுவிட்டாய்!
அந்த கச்சேரி வீதியில்

பேருந்து சக்கரத்தின்
தடயங்களைஅழித்து
விடத்துடிக்கும் காற்று..!

உன் விழிதந்த சலனம்
சேமித்துவைக்கும்
என் இதயம்...!!!!

எழுதியவர் : ரஞ்சித் (5-Mar-15, 1:13 am)
சேர்த்தது : ரஞ்சித்
பார்வை : 76

மேலே