அடிவாங்க வைத்த கவிதை

கண்ணாடி முன் நின்று என்னைப்
பார்த்தால் கண்ணாடி அணிந்த நீ
என் கண் முன் தெரிகின்றாய்

என் உடலிலே ஓடுதே இரத்தம் அது
உனக்காக புரிகிறது யுத்தம்
சத்தமில்லாமல் கொடு எனக்கு முத்தம்

உன்னை காணாத வேளையில் என் இதயம் துடிப்பதை நிறுத்தியேவிடுகிறது

தூக்கத்தில் தான் கனவு வரும்
கனவில் தான் நீ வருவாய் என்பதால்
பகலிலும் விழிக்க மறுக்கின்றது என் கண்கள்

உன் தாமரைகண் கூசும்எனில் அச் சூரியனை
கூட கடலில் புதைப்பேன்

உன் பவள வாய் துவர்கும் எனில் அக் கடலைக் கூட வற்ற வைப்பேன்

உன் பூ பாதம் வலிக்கும் எனில் இப் பூமியை
பூக்களால் நிரப்பிடுவேன்

நி அனுமதிப்பாயின் ஓர் உலகை
கூட நமக்கென வடிவமைப்பேன்

நீ கேட்டால் என் இதயத்தை கூட
கிழித்து தருவேன்
சந்தேகமெனில் என் மார்பை பிழந்து பார்
உன் உருவம் தெரியும்

கலப்படமற்ற என் காதலுக்கு...கலப்படமற்ற
என் இரத்தமே சாட்சி..,,அதனால் இரத்தத்தால்
என் பெயரை எழுதுகிறேன் இதோ


என் முதல் கவிதை...என் முதல் காதலுக்காக
நான் என் பள்ளி தோழிக்காக எழுதியது...
இந்த கவிதை என் ஆசிரியரிடம் சிக்கி அடி செமத்தையாக வாங்கினேன்...

எழுதியவர் : நவின் (5-Mar-15, 12:15 am)
சேர்த்தது : நவின்
பார்வை : 88

மேலே