கற்றவை சிறிதுமென் சிந்தையில்

வெண்பா எழுதென்று வெள்ளை உள்ளங்கள்
நன்பாக்கள் வடிக்கும் நன்மக்கள் - எனையும்
இன்பாக்கள் இயற்றிட தூண்டும் இதயங்கள்
இத்தளத்தில் உள்ளதை கண்டு மகிழ்கிறேன் !

இலக்கண இலக்கிய மறியாத எளியோன்
இச்சிறுவன் நானென அறியார் - எனினும்
இனபமே இயற்றிட எனக்கும் உண்டென
இயம்பிட வடித்துப் பார்க்கும் அடியேன் !

கற்ற தமிழும் நற்றமிழென் என்பதாலோ
கற்றவை சிறிதுமென் சிந்தையில் - தங்கிய
பொற்றமிழ் போற்றிடும் வகையில் வடியுது
நற்கவிகள் படைத்திட இங்கே உதவுது !

சுவாசிக்கும் தமிழால் வாசிப்பார் இதனை
விசுவாசம் நிறைந்த தமிழரும் - உதவிடும்
விமர்சன விவாதங்கள் விளங்கிட செய்திடும்
விளையும் இனியென் பல்சுவை கவிதைகள் !

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (20-Feb-15, 3:29 pm)
பார்வை : 157

மேலே