இப்போதைக்கு இதுதான் முடியும்
விட்டில் பூச்சி
விளக்குத்தூண்
தட்டாமாலை
சுற்றோ இது
மின்னல் தேகம்
சன்னல் ஓரம்
இரவுப் பாடகி
இசையில் நாயகி
கடித்துத் துப்பிய
கற்கண்டு தானிது
விரக்திப்புறா
வீட்டு வாசலில்
கோலம் கலைத்தது
கோபம் நிலைத்தது
எச்சில் விருந்துகள்
மிச்சம் வெளிச்சமோ
இத்தனை வார்த்தைகள்
கொட்டினேன் மேசையில்
இவைகளின் நடுவிலே
இங்கொன்று அங்கொன்று
புதிது புதிதென
புரியா எதனையும்
சேர்ப்பேன் பலவினை
நீக்குவேன் சிலவினை
மொத்தத்தில்
அரைகுறை வரிகளில்
கவிதை ஒன்று
மலர்ந்தது இன்று !
உனக்கே கூட புரிந்தால் என்ன
இல்லையென்றால்தான் என்ன..
இப்போதைக்கு இது தான் முடியும்
சரக்கு பத்தாது - கருணா
நிறையப் படி ..
இப்போதைக்கு குழப்பி அடி !
எப்படியும் புள்ளிகள் எதுவும்
தரப்போவதில்லை யாரும்
அப்புறம் என்ன..
ஜம்..ஜம்..ஜமாய்!
பட்..பட்..படார்..!
ஐயோ இது என்ன
பொறுக்காமல்
குழல் விளக்கும் வெடிக்குதே
..
வீட்டில் பூச்சி..
விளக்குத்தூண்..
தானோ இன்று ..?
முயற்சியில் தளரா
விக்கிரமாதித்தன் கதை
நினைவுக்கு வருதே!