தேசியகீதத்தில் பிழை - சந்தோஷ்

கல்லறையும் மரணித்துவிட்டது
இன்றைய விஞ்ஞானத்தில்
மின் மயானம்.!

*********************
புகைபிடிக்கிறது பூக்கள்
தேசிய நெடுஞ்சாலை நடுவில்
அலங்காரச் செடிகள்..!

*********************

குடிகாரனின் மனைவி
பத்தினி வேடத்தில் பசியாறாது
விபச்சாரம் நல்லதோ?

*********************

காந்திக்கும் போதை
ஆயிரம்ரூபாய் விநியோகத்தில்
மதிமயங்கியது வாக்குரிமை !

*********************

தேசியகீதத்தில் கருத்துப்பிழை
தமிழகத்தை காப்பாற்றவில்லை
காவேரியும் முல்லைபெரியாரும்.


-------------------------------------------
#மீண்டும் ஹைக்கூ பயிற்சி.


-இரா.சந்தோஷ் குமார்

எழுதியவர் : இரா. சந்தோஷ் குமார் (22-Feb-15, 7:16 pm)
பார்வை : 261

மேலே