vazhthukkal

வாழ்த்துக்கள்

மங்கை நீ இன்று
மண்ணில் உதித்த நாள்.

மாறாத உன் உருவ
மகுடத்தில் மற்றொரு
மரகதக் கல்
கூடிடும் நாள்.

கூடுதலின் மறுபெயர்
உயர்வு தானோ
உயர்ந்து கொண்டே இரு!
உன் வாழ்வில் உயரவே இரு!

நீல வானமும்
நிலவும் உயரே தானே!
எனவே தான் நீ
வான் நிலா!

மலர்ந்த மலரின் வாசமாய்
மழை தரும் மேகமாய்
சுவை தரும் தேனாய்
இதம் தரும் தென்றலாய்
சுடாத சூரியனாய்
ஓயாத கடலாய்
தேயாத நிலவாய்
வற்றாத நதியாய்

உறவுக்கெல்லாம் உயிராய்
உயர்ந்த சிகரமாய்
நட்புகெல்லாம் நங்கூரமாய்
வளம் பெற்று
நலமுடன் வாழ்ந்திட
நல் பிறந்த நாள்
வாழ்த்துக்கள்.

எழுதியவர் : Prabha (23-Jun-10, 2:13 pm)
பார்வை : 1062

மேலே