கண்ணீரின் வாசம்
மனதில் உள்ளதை
உதடுகள்
வார்த்தைகளாக வடித்துவிடுகின்றன
கண்களுக்கு வார்த்தைகள்
சொந்தமில்லை
கண்கள் சிந்தும்
கண்ணீர்துளியில்
இல்லாத அர்த்தங்கள்
ஏதுமில்லை
சிந்தும் கண்ணீர்
சிந்தனையின் அடிவேரை
நனைத்துவிடுகின்றன
வார்த்தைகள்
காற்றில் கரைந்தபின்னும்
கண்ணீர் துளியின் சுவடுகள்
கண்ணத்தில்
ஒற்றையடிப் பாதையாய்
பறைசாற்றுகின்றன
உன் மீது
எனக்குள்ள அன்பினை
கண்ணில் கசிந்த
கண்ணீர் துளியின்
வாசத்தினை
கைக்குட்டைகள் அறியும்
என் மனதை
நீ அறிவாயா ?